Tuesday, March 2, 2010

Sunday, January 3, 2010

www.vkalathur.com

அன்பான பார்வையாளர்களுக்கு...
வசந்தவாசல் தளத்தின் உரிமையாளர்
கவிஞர் அ.சலீம் பாஷாவாகிய நான்..
பரிந்துரை செய்யும்
இனிய பயன்மிகு தளத்தில் ஒன்று
www.vkalathur.com ஆகும்.
இந்த தளத்தில் direct link-காக
பிரபல தொலைக்காட்சிகளும்
செய்தித் தாள்களும் மற்றும் பல்வேறு
இஸ்லாமிய இதழ்களும்- இணைய தளங்களும்
இன்னும் பிற முக்கிய நிகழ்வுகளும்
உடனுக்குனுக்குடன் அறிந்துக்கொள்ள
ஏற்படு செய்யப் பட்டுள்ளன.
எனவே.. கண்டு பயன் பெறுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

Thursday, December 31, 2009

DAIRY 2010

உறக்கமிழந்த அதிகாலையில்
உற்சாகம் வந்து தொற்றிக்கொள்ள
ஒருங்கிணைய மறுக்கும்
உள்மனசு..!

ஒற்றை இரவில்
ஏதோ ஒன்று
தொலைந்து கிடைத்த
குதூகலத்தில்...
புத்துணர்வு..!

சாய்ந்த ஒன்றை
நிமிர்த்தி நிலை நாட்ட
பல லட்சியங்களுமாய்
புதுப்பிக்கப் படும்
பதிவான
தீர்மானங்கள்..!

நாட்குறிப்பில்
ஏற்றப்படாத
எத்தனையோ
மலர்ந்த
உதிர்ந்த நிகழ்வுகளிருக்க...
எழுதப்பட்ட ஐந்தோ
ஆறோ பக்கங்களோடு...
’பழையன’ என
வீசப்படும் சென்ற ஆண்டின்
டைரிகள்..!

பரவசத்தில்
துள்ளியோடும்
எண்ண அலைகளை
தடுத்து நிருத்தி...

இன்னும் நீ
சந்திக்கப் போகும்
புத்தாண்டுகள்தான்
எத்தனை?
சந்தித்த ஆண்டுகளில்
சாதித்தவைதான்
என்னென்ன?
அடுக்கடுக்காய்
மனம் துளைக்கும்
கேள்விக்கணைகளை
அலட்சித்து...
தொலைத்துவிட்ட
வாழ்வின் நகலுமாய்...

காணா தூரத்தில்
இல்லா ஒன்றை தேடி
நீள்கிறது
நம்
எண்ணத் தொலைவுகள்..!





Sunday, November 9, 2008

பிரிவு

வாழ்வின் விடியலை
நோக்கி
விரைந்திட்ட நாங்கள்
இன்று
கும்மிருளில்
சிக்கி தவித்தபடி...

வசந்தத்தின் வருகையை
நாடி
பறந்திட்ட நாங்கள்
இன்று
வழியில்
நிம்மதியை தொலைத்தபடி...

பிரிவின் துக்கத்தில்
வேதனையின் விளிம்பில்
வீழ்ச்சி என்றறிந்தும்
வெற்றியாய் தொடர்கிறது
எங்கள்
வாழ்க்கை பயணம்...

நஞ்சென்று நெஞ்சுணர்ந்தும்
தீயென்று சுயமறிந்தும்
நலமென்று நகர்கின்றோம்
நாடோடிக் கும்பலாய்...

கரையை எட்டிப் பிடித்து
தொட்டு விளையாடும்
கடலலைகளையும்
கடந்து..
எம்பி எம்பி
எண்ணிய இலக்கை
எட்ட இயலாத
எங்கள் உணர்வலைகள்...

மாக் கோலத்தில்
புன்னகைக்கும்
மகரந்தம் உலர்ந்த
மலர்களைப் போல்
வசந்தமிழந்த
வரண்ட வாழ்க்கையில்
விரக்தியை சுவாசித்து
வெறுமனே பூத்திருக்கிறோம்...

தினம் தினம்
கானல் நீரில்
கனவு தோணியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிபோன
காகிதப் பூக்களாய்...

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல நாள் குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விரைவு மெயிலேற்றி
வேகம் கடத்த நினைக்கின்றோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே...

மணக் கோலம் கண்ட
மலர் மாலை வாடும் முன்னே
மணையாளின்
மனதறியக்கூட வாய்ப்பில்லாது
விடைப் பெறச் செய்யும்
விடுமுறை நாட்கள்...

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...

பெற்று போற்றி
உயிர் காத்து வளர்த்திட்ட
அன்னைக்கு
இறுதி கடமையை கூட
முழுதாய் செய்ய இயலாத
இழிநிலை அவகாசம்...

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தன
பாதி வாழ்க்கை...

வரண்டுப் போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின் கடைசி அத்தியாயமாய்
அல்லாடும்
மீதி வாழ்க்கை..!

சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்-என
கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்து
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்...

சுருங்கச் சொன்னால்...

குடும்ப தொடர்பறுந்த
நாங்கள்...

உள்ளுக்குள்
உணர்வுகளை எரித்து
வெளியே
பிரகாசிக்கிறோம்--
ஒருவரிக் கவிதைகளாய்..!

Sunday, October 12, 2008

சுடாத சுடர்!

ஒரு முறைச் சொல்..!
ஓங்கிச் சொல்..!!

மதியையும் மனதையும்
இணைத்து
ஒருமித்துச் சொல்...

மதமில்லை என்னில்..!

ஆம்!
மதத்தால்
மகிழ்வில்லை
இம் மண்ணில்-எனவே
இனி
மதமில்லை என்னில்..!

தீபம் வேறு..
தீப் பந்தம் வேறு!

ஒளிர்வதில்
மிளிர்வது தீபம்
எஞ்சியது விளக்கு
அஞ்சுவது தீ...

நீ
அகலில் மிளிரும்
தீபமாய் இரு!
காற்றில் தாவி
காட்டுத் தீயாகாதே..!

மதம் கொண்டு
துவம்சம் தீர்க்கும்
யானை குணம்
கொண்டோன் அல்ல நீ..!

மனிதா..!
மதம் ஏன்..
மாசு ஏன்...

சினத்தை தூண்டும்
மதங்கள் இடித்து
மாசு அகற்றுவோம்..!

அறம் கூறும்
அப்பை தெளித்து
நட்பை புகட்டுவோம்..!

வேதங்கள் சொல்லும்
நீதங்கள்
ஆயிரம் ஆயிரம்-அதில்
மதங்கள் பூசிய
வெளிப் பூச்சுக்களை
சுரண்டி எறிவோம்..!

இரண்டுங் கெட்டான்கள்
இடையில் வந்து
இடைச் செருகும்
போதங்களை
சுட்டெறிப்போம்..!

நட்பைக் கொண்டு
ஒன்றாய் நின்று
பகைமையை விரட்டி
சமத்துவத்தின்
பாலம் அமைப்போம்..!

புன்னைவனப்
பொய்கையாய்..
பூக்களை கொய்யாத
புது உலகம் படைப்போம்..!

அதில்
வெப்பமின்றி
வெளிச்சம் தரும்
சுடாத சுடர்
நீ..!

பாதச் சுவடுகள்.

பிறந்தவள்
பெண்ணெனவே..
தன்னினம் ஈனமென
தானீன்ற
தவக் குழந்தை
தனக்கே பாரமென...

நெஞ்சம் துளிர்த்த
ஈரம் துடைத்து..
நெல் மணியும்
கள்ளிப் பாலும்
வரப்போரம்
சுமந்துச் சென்றாள்..
தன் சேயழிக்கத்
தாயொருத்தி..!

அதே வயலில்
அவளின்
அதே சுவட்டில்
கால் பதித்து...

தன்
கண்ணிழந்த
குருட்டுக் கன்றுக்கு
கால் நடக்கக
கற்றுத் தர..
தன்
வால் கொடுத்து
நடத்திச் சென்றதோர்
தாய் பசு...

தாணியங்களை
தானுண்டு..
தன் கன்றுக்கு பாலூட்ட..!

நிலையான நினைவுகள்!

நினைவிருக்கா தோழியே!
பள்ளிப் பருவத்திலே
விடுமுறை என்றதுமே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம்
தாவி குதித்தது..!

ரொட்டித் துண்டுகள்
தின்றபடி
குட்டிக் கதைகள்
பேசித் திரிந்தோம்...

தொண்டியிட்ட
கன்றுக் குட்டியை
கொடு போட
துரத்தித் திரிந்தோம்...

பிஞ்சு விட்ட
வெள்ளரிக் கொடியை
வரப்போரமாய்
தேடித் திரிந்தோம்...

கொத்தும் கிளியை
விரட்டி விட்டு
குஞ்சுக் கிளியை
பிடித்துத் திரிந்தோம்...

தீப் பெட்டிகளில்
நூலினைத்து
காது கொடுத்து
பேசித் திரிந்தோம்...

ஈர மணலை
கொட்டில் நிறைத்து
முட்டை என்றும்
தட்டித் திரிந்தோம்...

பருத்திப் பூவை
பறித்து வந்து
மாலை என்றும்
கட்டித் திரிந்தோம்...

நாம்
துள்ளிக் குதித்து
புள்ளி அமைத்த
பாதைகள்
இன்று
நட்பின்
வண்ணக் கோலங்களாய்..!

அதனால்தானே
உன் தொழியை எனக்கும்
என் நண்பனை உனக்குமாய்
வாழ்க்கைத்
துணையாக்கிக் கொண்டோம்..!